அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் படம் தீயிட்டு கொளுத்தப்பட்டது கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா அதிபர் மதுராவையும் அவரது மனைவியையும் விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது
அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் கண்டன உரையாற்றினார்
செயற்குழு தோழர் துரைசாமி கிருஷ்ணன் அருணன் கந்தசாமி ஒன்றிய குழு உறுப்பினர் சிற்றம்பலம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள் மாவட்ட குழு உறுப்பினர்கள் மலர்கொடி சரோஜினி கிளை செயலாளர் ஆதிலட்சுமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் நன்றி கூறினார் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீ வைத்து கொளுத்தினார்கள் அப்போது ட்ரம்ப் ஒழிக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷமிட்டனர்