தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்
ஏ.எம்.விக்கிரமராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்து மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே அனிச்சம் பெஸ்ட் காபி சைவ உணவகம் திறப்பு விழா
நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் கோவிந்தராஜுலு மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 99 குழுமம் இயக்குனர் மனோ சாலமன்,வழக்கறிஞர் வினோத் கண்ணன்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் அன்சர் அப்துல் சமத், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொருளாளர் சண்முகம்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அக்பர்அலி, ஆகியோர் விழாவில் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் ஜி.ஜெ.பிரபாகரன்,
மாவட்ட செய்தி தொடர்பாளர் பவித்ரா சீனிவாசன்,வழக்கறிஞர் கோவில்பட்டி
அமுதன் சுப்பிரமணியன்,உள்ளிட்டோர் விழாவில் அனைவரையும் அழைத்து மகிழ்ந்தனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களிடம் ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் வியாபாரிகள் பாதுகாப்பு சட்ட விதிமுறையை எளிமைப்படுத்த வேண்டும் அபராத தொகையும் எளிமைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் நான்கு கட்டங்களாக வரி கட்டுவதற்கான தவணையை இரண்டு தவணையாக குறைத்ததை வரவேற்கிறோம்.
இது ஒரு தவணையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்துவோம்
நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளின் பிரச்சினையை வலியுறுத்த லோக்சபா
எம்பி பதவி வணிகர்ளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்
வலியுறுத்துவோம் கடந்த ஆண்டு மே மாதம் 5. ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார்.
அப்போது 11 கோரிக்கைகள் அவரிடம் வலியுறுத்தினோம் அதில் அப்போதே 4 கோரிக்கைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் வணிகர் சங்க உறுப்பினர் உதவி தொகையை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி உள்ளார்
அதை நாங்கள் வரவேற்கிறோம் இதுபோல பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
மேலும் இவ்விழாவில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.