வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழா..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ருக்மணி தலைமை தாங்கினார்.
கல்லூரி தலைவர் மு.ரமணன், செயலாளர் பிரியா ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து கல்லூரி வளாகத்தில் பொங்கப் பானையில் படையிலிட்டு சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தினர்.
மேலும் மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டுக்களான கோலாட்டம், கும்மி ஆட்டம், சிலம்பம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.