பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சுடர் மூலை தீபம் தலைமையில் – மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன் , முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இன்குலாப் , கல்வி பொருளாதாரம் விழிப்புணர் இயக்கம் மாநிலத் துணைச் செயலாளர் ஏ.ஆர். அய்யங்காளை, கிழக்கு மாவட்ட செயலாளர் அரசு முத்துப்பாண்டியன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், மாநகர் மாவட்ட பொருளாளர் மணியரசு, மாவட்ட துணை செயலாளர் ராம்குமார் பாண்டியன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், ஊடக பிரிவு மாவட்டம் ஆதி வளவன், வார்டு கவுன்சிலர் சேவுகரத்தினம்,
புதூர் பிரபாகர், ஒன்றிய செயலாளர் கருவேலம்பட்டி முத்துக்குமார் ,தொகுதி துணை செயலாளர் நந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜான் ஸ்டீபன் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.