கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (59). 1985ம் ஆண்டு இந்த இராணுவத்தில் பணியில் சேர்ந்தவர் 39 ஆண்டுகள் தொடர்ந்து இந்திய இராணுவத்திற்காக பணிபுரிந்து அவுல்தாராக ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் இன்று தனது சொந்த ஊரான வெங்கடாபுரம் கிராமத்திற்கு வந்தார். அங்கு யாரும் எதிர்பாராத நிலையில், ஓய்வுபெற்று வீடு திரும்பும் துரைசாமிக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலை அணிவித்து மேளதாளங்களுடன் கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது அவர் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று, பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
வெங்டாபுரம் கிராத்தில் 300 குடியிருப்பு வீடுகள் உள்ளன. அதில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்திலிருந்து ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், இராணுவ கிராமம் என செல்லமாக இக்கிராமத்தை அழைப்பதுண்டு. இதன் காரணமாக இக்கிராமத்தில் ஓய்வு பெற்ற இராணுவத்தின் நலச்சங்கம் அமைக்கப்பட்டு, அலுவலகம் அமைத்துள்ளனர்.
இந்த ஓய்வு பெற்ற இராணுவத்தின் நலச்சங்கம் மூலம் தற்போது ஓய்வு பெற்று வரும் துரைசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.