தென்காசி
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் கொண்டாடப்பட்ட மருத்துவர் தின விழாவிற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த விழாவில் மாணவ, மாணவிகள் மருத்துவர் வேடத்தில் வந்து தாங்கள் எதிர்காலத்தில் மருத்துவராகி சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்வது பற்றி பேசினர்.
குத்துக்கல்வலசை ஆயிஷா பாலி கிளினிக் டாக்டர் ஜஹானாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவர் தின உரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் பள்ளி உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் அனைவருக்கும் நன்றி கூறினார்.