பாரபச்சம் காட்டும் ராஜபாளையம் நகராட்சி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 31 வது வார்டு பகுதிக்குட்பட்ட பச்சமடம் பகுதியை மட்டும் புறக்கனித்து பாரபச்சம் காட்டுவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டு பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி குடிநீர்திட்டம் என்று சாலைகளை சேதப்படுத்திவிட்டு மீண்டும் சாலைகள் போடுவதற்கு ஒரு நாளு தெருக்களுக்கு மட்டும் பேபர் பிளாக் ரோடு என்று கூறப்பட்டது
அதற்கு பகுதி மக்கள் சிமென்ட் அல்லது தார் ரோடு போடுங்கள் என்று கூறியதற்கு அதற்கு பழிவாங்கும் விதமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது பொதுமக்கள் கோரிக்கையான ஊரணி பகுதியை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தர பல லட்சம் செலவில் டென்டர் விடப்பட்டு அதற்கான வேலை பாதியிலேயே உள்ளது
திடக்கழிவு மேலான்மையை வேறு இடத்துக்கு மாற்ற கூறியும் நடக்கவில்லை மேலும்
பாதாள சாக்கடை திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பம்பிங் நிலையம் வீணாகும் அவலம்!
தெருவின் தென்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பம்பிங் செய்வதற்காக ஒரு நீரற்ற நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீரேற்று நிலையத்தில் மின்சார வசதிகள் மற்றும் மின்சாரம் இல்லாத பட்சத்தில் இயங்க ஜெனரேட்டர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இதை ஏற்றுவதற்கும் ஏற்றி அனுப்புவதற்கும் உரிய வழிமுறைகளை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு உரிய ஆட்கள் நியமனம் செய்யப்படாததால், கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக இதில் காவலர்கள் யாரும் நியமிக்கப்படாததால் செயல்படாத நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக கழிவு நீர் அனைத்தும் தானாகவே வெளியேறி, பக்கத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து வெளியேறி வருகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டதாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் குழுவும், இன்னும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என நகராட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு காவலர் ஒருவர் நியமனம் செய்து கழிவு நீரை பம்பிங் செய்து வெளியேற்ற வேண்டியது நகராட்சியின் கடமையாகும்.
எதைப்பற்றியும் கவலைப்படாத நகராட்சி நிர்வாகம் மனதளவில் குமுறும் குடியிருப்பு வாசிகள் தீர்வு எப்போது என்பது சமூக ஆர்வளர்களின் கேள்வியாக உள்ளது