ஆற்காடு எஸ் டிரேடர்ஸ் நிறுவனர் தொழிலதிபர் ஏ.வி. சாரதியின் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம் :-
செய்தியாளர் திமிரி வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ,வேலூர் ரோடு இந்திய வங்கியின் அருகிலுள்ள ஏவி. சாரதியின் அலுவலக வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது
இந்த முகாமிற்கு பிரபல தொழிலதிபரும், கொலைவள்ளல் மற்றும் திமுக ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளருமான ஏ. வி.சாரதி ரத்ததான முகாம் நிகழ்வினை குத்துவிளக்கேற்றி தலைமை தாங்கி நடத்தி வைத்தார் .
இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர் ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சாத்துக்கொடி, மாதுளை ஜூஸ் குடிக்க கொடுத்தனர்
அதனைத் தொடர்ந்து பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள், மற்றும் டி-ஷர்ட் அடங்கிய தொகுப்பினை தொழிலதிபர் ஏ.வி சாரதி வழங்கி நன்றி தெரிவித்தார்.
மேலும் இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தத்தினை மெசானிக் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனத்திற்கு வழங்கினர் இரத்ததான முகாமில் பங்கு பெற்று தானம் செய்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.