விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூா் சிவா அவர்களை ஆதரித்து, புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மூங்கில்பட்டு கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கழக அரசின் சாதனைகளை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சன். சண்முகம், சக்திவேல், கோபாலகிருஷ்ணன், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை, தொகுதி செயலாளர் இரா. சக்திவேல், நடராஜன், விழுப்புரம் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்து வாக்கு சேகரித்தனர்.