பெரம்பலூர்.ஜன.11. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலூர் ஊராட்சி தம்பிரான்பட்டி கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு , மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடிட பொது விநியோக திட்டத்தில் பயன்பெறும் 2 கோடியே 19 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பினை அறிவித்துள்ளார்கள்.
பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு, வேட்டி,சேலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவை அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றத. அதனுடன் வேட்டி சேலைகளும் வழங்கப்படுகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1,93,921 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகின்றது.
பெரம்பலூர் வட்டத்தில் 53,030 குடும்ப அட்டைதாரர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 51,666 குடும்ப அட்டைதாரர்களுக்கும், வேப்பூர் வட்டத்தில் 52,721 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆலத்தூர் வட்டத்தில் 36,504 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 1,93,921 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகின்றது. இதன் மூலம் 1,93,921 குடும்பங்களைச் சேர்ந்த 5,83,294 நபர்கள் பயன் பெறுவார்கள்.
இந்நிலையில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலூர் ஊராட்சி தம்பிரான்பட்டி கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என் அருண்நேரு பார்வையிட்டு, அரிசி குடும்ப அட்டைதார்ர பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், தங்களுக்கு 3000ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்க தங்களது நன்றியினை தெரிவிக்க வேண்டும் என பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, அட்மா தலைவர் ஜெகதீசன்,பெரம்பலூர் நகர மன்றத் தலைவர் திருமதி அம்பிகா , துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) சிவகுமார், நகர்மன்ற உறுப்பினர் சிவக்குமார், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.