திருவொற்றியூர் மத்திய பகுதி தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மணலி பலராமன் தெருவில் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் ஏற்பாட்டில் நடைபெற்றது ஒரு குடும்பத்திற்கு இரண்டு கரும்பு ஒரு கிலோ அரிசி வெல்லம் முந்திரி ஏலக்காய் உட்பட பல்வேறு பொருட்கள் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து 14 ஆண்டுகளாக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மணலியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம் எல் ஏ திருவெற்றியூர் தொகுதி பார்வையாளர் எஸ் மோகன் வடசென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார் வ. முத்துசாமி எம் எஸ் நாகலிங்கம் டி. கரிகால் சோழன் டி. கணேசன் மு. செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து திருவொற்றியூரில் மண்டல குழு தலைவர் தி. மு தனியரசு ஏற்பாட்டில் 1500 பேருக்கு பொங்கல் தொகுப்பையும் ஆ ராசா எம்பி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.திருவொற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர் எம் வி குமார்.வட்டச் செயலாளர் பி சதீஷ்குமார் குறிஞ்சி கணேசன் சைனஸ். குமரேசன். தமிழ்ச்செல்வன்உட்பட பலர் கலந்து கொண்டனர் காலடிப்பேட்டை எழுத்துகாரன் தெருவில் மாமன்ற உறுப்பினர் வீ.கவி கணேசன் ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு பொங்கல் தொகுப்பையும் ஆ.ராசா எம்.பி தொடங்கி வைத்தார் அப்பகுதியில் நடைபெற்ற கோலம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.