திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழா காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பொங்கல் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இப்பொங்கல் விழா நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை வரவழைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் பொங்கல் சமைத்து கரும்பு, பொங்கல் படையல் இட்டு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கயிறு இழுத்தல்,தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், விமலா பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் ,உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நர்மதா ராணி சான்றிதழும் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.
விழா நடைபெற்ற இடத்தில் பெட்டிக்கடை, டீக்கடை, பாப்கான் கடை அமைக்கப்பட்டு ஒரு கிராமம் போன்ற தோற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் கார்த்திகேயன், துணைத்தலைவர் எஸ் பி பாஸ்கரன், செயலாளர் முகமது ரஃபீக், துணைச் செயலாளர் சுடலாத்தி சிவகுமார், பொருளாளர் நரேஷ் குமார், மற்றும் மூத்த அரசு வழக்கறிஞர் சந்திரமோகன், சபாபதி,ஜெயராஜ், செயற்க்குழு உறுப்பினர்கள் நிர்மல் , குலாம் முகமது பாட்சா,செல்வராசு, தனலட்சுமி மற்றும் வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார் ,ஏஎஸ் மனோகர் , செந்தில்குமார், முத்துக்குமார், உத்திராபதி, செல்லதுரை, யோகராஜ், சுந்தர் ஆதித்தன், மதன்குமார் ,கோகிலா, ரம்யா , அறிவழகன், தனசேகர் ,கோகுல் ராஜா, ரத்தினம் ,ஏகே பழனிவேல், பன்னீர் செல்வம்,சிவகுமார், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவலர்கள், சிறுவர் சிறுமிகள் என 300க்கும் மேற்பட்டோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்