ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய என்னுடைய பயணம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் நிகழ்வுகளை நடத்தி இருந்தாலும் முதல் முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகழ்வு நடத்தியது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது.
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் யானை வழித்தடங்களும் தலைப்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்தேன்.

50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.. இந்த தகவல்கள் அவர்களது குழந்தைகளுக்கும் சென்று சேரும் என எதிர்பார்க்கின்றேன்.. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியத்துவம் அதன் தொன்மை அதில் ஓடுகின்ற அது ஆறுகள், ஈர நிலங்கள் மற்றும் அங்கு வாழும் பறவைகள் உயிரினங்கள் என பல தலைப்புகளில் தகவல்களை பகிர்ந்து கொண்டேன்.. முக்கியமாக கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள யானை வழித்தடங்களை பற்றியும் அதனை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தேன். அதுபோல விலங்கு மனித எதிர்கொள்ளல் நடைபெறுவதற்கான காரணங்களையும் விளக்கினோம்..

இந்த நிகழ்வை திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை ஏற்பாடு செய்திருந்தது.. தூய நெஞ்சர் கல்லூரியில் உள்ள ஒரு அரங்கில் நடைபெற்றது.
இதில் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டிய அவசியத்தையும் நுகர்வு பொருட்களில் இருந்து நம் பிள்ளைகளை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளையும் பகிர்ந்து கொண்டோம்.
- ஆம்பூர் இயற்கை வழி வேளாண் விவசாயிகள் குழு
- திருப்பத்தூர் மாவட்ட இயற்கை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை