கடத்தூர்,
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடத்தூர் அருகே உள்ள சில்லாரஅள்ளி வினாயக மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு, கடத்தூர் மருத்துவ அலுவலர் கனல் வேந்தன்ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து பார்வையிட்டனர்.
முகாமில் இருதய நோய் சிகிச்சை,பொது மருத்துவ சிகிச்சை பிரிவு,கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை ,இரத்த , சிறுநீர் ஸ்கேன் பரிசோதனை, பால்வினை நோய்,
தொற்றா நோய் ,சர்க்கரை நோய், இரத்த அழுத்த பரிசோதனை,எலும்பு மூட்டு பிரிவு,
கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை இயன்முறை மருத்துவம்,
பல் மருத்துவம்,வாய் புற்றுநோய்,குழந்தைகள் நலம்,மனநலம்,தோல் நோய் ,கண் மருத்துவம்,காச நோய் சளி பரிசோதனை,காது, மூக்கு, தொண்டை பிரிவு,சித்த மருத்துவ பிரிவு,நரம்பியல் சிகிச்சை,நுரையீரல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
திமுக ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம்,பள்ளி தாளாளர் தனலட்சுமி விஸ்வநாதன், முதல்வர் செல்வம் , டாக்டர்கள் விக்னேஷ், பிரியதர்ஷினி. வடிவேல், பச்சியப்பன், சோமு, ஜலபதி மற்றும் மருத்துவர்கள், மருத்து பணியாளர்கள் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்றனர்.