கம்பம் அருகே ஸ்ரீ சந்தன தேவி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி காமு குல ஒக்கலிகர் குஞ்சடிக காப்பு முதற் குலமான கண்டன வேரு குலத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சந்தன தேவி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
முதல் நாள் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்தக்கால் நடுதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது
கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு யாக பூஜைகள் கலச பூஜைகள் நடைபெற்றன நிறைவாக வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டு பிள்ளைகளை அருள்மிகு கதிரேச சுவாமி மாலை கோவில் வளாகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு புகுந்த வீட்டு பிள்ளைகள் அருள்மிகு ஸ்ரீ சந்தன தேவி அம்மன் கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது
இந்த கும்பாபிஷேகத்தை கர்நாடகா ௭லேராமபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனுமந்தனார் சுவாமிஜி தலைமையிலான குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள் கும்பாபிஷேகத்தை ஒட்டி பக்தர்களுக்கு காலை 11 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.