வீனஸ் கல்வி நிறுவனத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் திருவிழா
கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனம் சார்பாக பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வீனஸ் கல்வி நிறுவனரும்,மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் திருவிடைமருதூர் தெற்கு வட்டாரத் தலைவருமான
டாக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் ,கும்பகோணம் மாநகர் மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏவிஎம் ஹுமாயூன் கபீர் , வழக்கறிஞர் சாலியா கார்த்திக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனம் வளாகத்தில் பாரம்பரிய வேட்டி சேலை உடுத்தி, ஓலை குடிசைகள் அமைத்து தென்னங்கீற்றில் தோரணம் கட்டி, சர்க்கரை பொங்கல் செய்து பொங்கலோ பொங்கல் என்று கூறி உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொடர்ந்து சினிமா பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்களை பாடியும் ஆடியும் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.
200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.