மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை மாதம் மாசி வீதி களில் நடைபெறும் தேர் திரு விழா மிகவும் சிறப்பு வாய்ந் தவை.

அதன்பின்னர் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழா பிரசத்தி பெற்றவை.

இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. திருவிழா தினத்தன்று காலை 5 மணிக்கு சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்படாகி கீழமாசி வீதி வருவர். அங்கு தனித்தனி யாக தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கிளம்பி யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளி வீதி குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைந்தனர்.

அதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படிய ளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும்அரிசியை எடுத்துகொண்டு வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம் பிக்கை. இந்த மார்கழி மாத அஷ்டமி திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதை யொட்டி தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் நடந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *