பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழா..
மற்றும் மாபெரும் கோலப்போட்டிக்கான பரிசளிப்பு விழா மெலட்டூர் பேரூராட்சியில் நடைப்பெற்றது..

இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் திரு நிஜாம் அலி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திரு அசாருதீன் உதுமான் அலி அவர்களின் முன்னிலையில்
பேரூர் கழக செயலாளர் திரு மா.கணேஷ் குமார் தலைமையில்
விழா நடைபெற்றது..

கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்நிகழ்வில் கோலப்போட்டியில் பங்கேற்ற 600 க்கும் மேற்பட்டோருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் பரிசு பொருட்களை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திரு .அசாருதீன் உதுமான் அலி அவர்கள் வழங்கினார்..
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு ராம் பிரபு அம்மாப்பேட்டை கிழக்கு ஒன்றியம் பகுதி 1 பொறுப்பாளர்
திரு சீனு.மணி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி ஜெயமணி
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திரு .இளவரசன் ஒன்றிய கழக நிர்வாகிகள் முருகன் மணியரசன் சிவாமணி பேரூர் கழக நிர்வாகிகள் திருமதி பிரபா ரவிக்குமார் திருமதி கோமதி கணேசன் மனோ நெப்போலியன் திருமதி மது பாலா அஜய் . மாங்குடி அருண் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்..
இந்நிகழ்வில் பொதுமக்கள் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *