ஏழை எளிய மக்கள் பயன் படும் வகையில் குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு அருகில் உள்ள அதிநவீன நோயறிதல் ஆய்வகம் மற்றும் செயலாக்க மையம் பள்ளியின் இணை நிறுவனரும், அறங்காவலருமான திருமதி எல்சம்மா தாமஸ் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
ஊட்டியில் உள்ள எம்.பாலடாவில் உள்ள குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு அருகில் உள்ள அதிநவீன நோயறிதல் ஆய்வகம் மற்றும் செயலாக்க மையம் ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் லேப்ஸ் சார்பில் அமைக்கபட்டு உள்ளது
ஊட்டி நகரம், குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரத்த சேகரிப்பு மையங்கள் விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது
குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் இணை நிறுவனரும், அறங்காவலருமான திருமதி எல்சம்மா தாமஸ் தலைமை வகித்து இந்தமையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
அருட்தந்தை அடைகலம் அவர்கள் பாரம்பரிய குத்துவிளக்கு விளக்கேற்றலில் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்
இந்த இனிய நிகழ்வில் குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் மூத்த துணைத் தலைவர் திருமதி சாரா ஜேக்கப், குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் திரு. ஜேக்கப் தாமஸ் மற்றும் டாக்டர் அசோக் பிரசாத் மற்றும் டாக்டர் உதிதா பிரசாத், டாக்டர் பி.சி. தாமஸ் அறக்கட்டளை டிரஸ்டிகள் கலந்து கொண்டனர்
அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராமத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஊட்டி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த பிரபல மருத்துவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆண்டர்சன் நோயறிதல் மற்றும் ஆய்வகங்களில் உள்ள வசதிகள்
ஆண்டர்சன் நோயறிதல் மற்றும் ஆய்வகங்கள் சர்வதேச தரத்திலான உபகரணங்களுடன் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன,
இது கண்டறியும் சேவைகளில் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்கிறது. இந்த ஆய்வகம் கிளவுட்-அடிப்படையிலான ஆய்வக தகவல் அமைப்பைக் கொண்டுள்ளது,
விரிவான பரிசோதனை: அனைத்து வகையான இரத்த அளவுரு பரிசோதனை, ECG மற்றும் X-ray வசதிகள் உட்பட பலதரப்பட்ட சேவைகளை இந்த மையம் வழங்குகிறது.
ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் லேப்ஸ் சமூகத்திற்கு சிறந்த நோயறிதல் சேவைகள் மற்றும் சுகாதாரமான ஆய்வுகளை வழங்குவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.