கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் பிரிவு கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரிவின், 7 வது ஆண்டாக, 2024ம் ஆண்டு இப்பாடதிட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஸ்வாகதம் 2024 எனும் தலைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் விஜிலா எட்வின் கென்னடி வரவேற்புரை நிகழ்த்தினார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைதாளாளர் சங்கர் வாணவராயர் மாணவர்கள் மத்தியில் தலைமையுரை ஆற்றினார்.
அப்பொழுது முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் மத்தியில் அவர் கூறியதாவது…
குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது கல்வியின் தத்துவத்தில் வேரூன்றி நிற்கின்றது. மாணவர்களுக்கு கல்வி மட்டும் இல்லாமல் நல்ல ஒழுங்கங்களை கற்று தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாணவ மாணவியர்களாகிய நீங்கள் இக்கல்லூரியில் படித்து முடித்து பட்டங்களை பெற்று வெளியே செல்லும் பொழுது சமூகத்தில் ஒரு நல்ல மனிதர்களாக தனித்து நிற்க்கும் ஆற்றலை இக்கல்லூரி உங்களுக்கு கற்று தரும் என எங்களுக்கு ஆழமான நம்பிக்கை உள்ளது என்றார். இதனை தொடர்த்து இந்த ஆண்டு 11 இளங்கலை பாடப்பிரிவுகளில் மொத்தமாக 476 மாணவர்கள் இங்கு பயில வந்து உள்ளனர்,
அவ்வாறு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறி கொள்வதாக தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.