மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் உயிர்காக்கும் மருத்துவ மையங்கள்-அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் உயிர் காக்கும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்படும் என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மதுரை அரசு மருத்துவ மனையில் ரூ.4 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கட்டமைப்புக்கான தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு மதுரை அரசு மருத்துவ மனைக்கு ரூ.420 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக 15 முறை டெல்லியில் பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம். எய்ம்ஸ் அதிகாரியை, ஜப் பான் டோக்கியோவுக்கு அழைத்துச் சென்று ஜைக்கா நிதி நிறுவன அதிகாரிகளை சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்யு மாறு வலியுறுத்தினோம்.
இந்த பணிகள் வரும் பொங்கலுக்குள் முடிய வாய்ப்பில்லை.வரும் 2027-ம் ஆண்டு அதன்படி கட்டுமான பணி தொடர்ந்து நடந்து வருகிறது கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று தான் எங்களிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் உயிர்காக்கும் வகையில் மருத்துவ மையங் கள் அமைக்கப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்படும் என அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் மூர்த்தி,சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் பிரவீன்குமார், டீன் அருள்சுந்தரேஷ்குமார், பூமி நாதன் எம்.எல்.ஏ. உள்ளிட் டோர் உடனிருந்தனர்.