பழனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெருந்தலைவர் காமராசரின் 122 வது பிறந்தநாள் விழாவானது கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் காமராசரின் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்து விஜயன், மேற்கு மண்டலத் தலைவர் வீரமணி, மாவட்ட துணைத்தலைவர் முருகானந்தம்மாவட்ட பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நேரு, ராஜீவ்காந்தி சமூக அறக்கட்டளை மாவட்ட தலைவர் செந்தில்குமார்,மாவட்ட செயலாளர் பிரேம்குமார், நகர பொருளாளர் தமிழரசன், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற துணைத்தலைவர் பாலமுருகன்,சட்டமன்ற பொது செயலாளர் பாண்டி, டான்சி கதிரேசன் ,ஆட்டோ கணேசன், முருகேசன், மானூர் செல்லம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர் சிவாஹாசன், மாவட்ட துணைச் செயலாளர் லியாஹத், நகர செயலாளர் சேக் தாவூத் ஒலி, நகர பொருளாளர் திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் கோபிஹாசன் மற்றும் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் அஜ்மல்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.