கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு,பொதுகுழு கூட்டம்..

தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் அரசியல் நடத்த முடியாத நிலை உள்ளது என்று தமிழக நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன் தெரிவித்துள்ளார்.

தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கரூர் ஈரோடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன், நடைபெற்ற மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 1400 பேர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக நீதி கட்சி துவங்கிய ஓராண்டில், நடத்தப்படும் முதல் கூட்டமாகும்.எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்தும் தேர்தல் வியூகங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து க்கிய தீர்மானங்கள் நிறைவேற்றி பட்டுள்ளது.தமிழகத்தில் குறளற்ற சமூகங்களுக்குக்கான அரசியல் அதிகாரத்தை பெற்றுத் தர தமிழக அரசியலில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். ஆனால் இதுவரை எந்த கட்சியும் இதனை நடைமுறைப்படுத்தாததால் தமிழக நீதிக்கட்சி இட ஒதுக்கீட்டு கொள்கையுடன் அரசியல் பிரதிநிதித்துவம் கொண்டு செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னதாகவே ஜாதி வாரியான கணக்கெடுப்பினை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்திறோம்.

தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராக இருக்கின்றோம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை எந்த கட்சி கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளோம்.ஐந்து தொகுதிகளில் மூன்று பொது தொகுதிகள், இரண்டு தனி தொகுதிகள் அதில் ஒன்று எஸ்.டி பிரிவினருக்கு வழங்க வேண்டும். மூன்று பொதுத் தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர், மற்றொருவர் மூன்றாம் பாலினத்தவருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம்.தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தில் மட்டும் அரசியல் செய்ய விரும்பவில்லை தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் நாங்கள் கட்சியின் அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றோம்.

தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் அனைத்து சமூகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.தமிழகத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் அரசியலில் ஈடுபட முடியாத நிலை என்பது உள்ளது. அடிதட்டு மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகளுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு கூட எளிதாக அனுமதி கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் செய்யும் அரசியல் தான் காரணம் எனவே இனிவரும் காலங்களில் எந்த குறுக்கீடும் செய்யக்கூடாது என கோரிக்கை வைக்கின்றோம்.

அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு வழங்கும் கட்சியுடன் இருந்தால் கூட்டணி வைக்க உள்ளோம் ஆதரவு தெரிவிக்க மட்டுமே கட்சி நடத்தவில்லை மக்களுக்காக களமாட கட்சி துவக்கி உள்ளோம் எதிர்வரும் பிப்.6 ம் தேதி ஈரோடு அருகே உள்ள பெருந்துறை விஜயமங்கலத்தில் தமிழக நீதி கட்சியின் முதல் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவதாக திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டில் தமிழகத்தில் அரசியல் களமாடிய முக்கிய மூத்த அரசியல்வாதிகளை கட்சியில் இணைக்க உள்ளோம் என்றார்.

விஜய் தற்பொழுது புதிதாக கட்சி துவங்கியுள்ளார் நாங்களும் புதிதாக கட்சி தொடங்கியுள்ளோம் எங்கள் பக்கம் விஜய் வந்தால் ஏற்றுக் கொள்வோம். அவர் தமிழகத்தில் 40 தொகுதிகளில் கட்சி துவங்கியுள்ளார் நாங்கள் தமிழகத்தில் தற்போது தான் 20 தொகுதிகளில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளோம். விரைவில் மற்ற மாவட்டங்களிலும் கட்சியை வலுப்படுத்தி,2031ல் தமிழகத்தில் வலிமை வாய்ந்த அரசியல் கட்சியாக தமிழக நீதி கட்சி விளங்கும் என்றார்.
மேலும் கரூர் மாவட்டத்தில், இரவு நேரங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறிப்பாக காவேரி ஆற்றில் மணல் லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் அருளப்படுவதை அரசு வேடிக்கை பார்க்காமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் தமிழக அரசியலில் அதிகாரம் அற்ற அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து அரசியல் படுத்த தமிழக நீதிக்கட்சியின் அனைத்து சமுதாய கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கட்சியின் கிளையை உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளர்களாக வேங்கை ரவிக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர்களாக தேக்கமலை ஜெகன் துணை ஒருங்கிணைப்பாளராக அருள்முருகன் மதன் மாசி ஆகியோரை பொறுப்பாளர்களாக பொதுகுழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *