கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்

கோவை காளப்பட்டி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், AI உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் டிப்ளமோ பயின்று வருகின்றனர்.

மாணவர்கள் கல்வி பயிலும் போது முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக, சுகுணா பாலிடெக்னிக் நிர்வாகம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2025–26 ஆம் ஆண்டுக்கான இறுதி ஆண்டு பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்ளமோ மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கான உத்தரவுகளை பெற்றுள்ளனர்.

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், EEE, ECE மற்றும் கணினி பொறியியல் துறைகளில் பயிலும் மாணவர்கள் கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களான பாரத் பென்ஸ், ராயல் என்ஃபீல்டு, ரமணி வோல்க்ஸ் வேகன், சந்திரா ஹுண்டாய், டைட்டான், சுகுணா பம்ப்ஸ் அண்ட் மோட்டார்ஸ், லஷ்மி மெஷின் வர்க்ஸ் (LMW) போன்ற பல நிறுவனங்களில் வருடத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கு மேல் சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் முன்னனி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உத்தரவை பெற்ற மாணவர்களுக்கு சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி டீன் ரம்யா மற்றும் முதல்வர் கோவிந்தராஜுலு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *