தர்மபுரி தொகுதி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

தர்மபுரி தொகுதி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன், பொங்கல் விழாவை தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாகக் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து தொகுதி மாவட்டங்களிலும் கட்சியினர் சமத்துவ பொங்கலை வெகுவிமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தர்மபுரி தொகுதி மாவட்டச் செயலாளர் பாண்டியன் தலைமையில்,

தர்மபுரி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

புதிய பானையில் பச்சரிசி இட்டு, கரும்புகளுடன் பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் கொதிக்கவிடப்பட்டு கொண்டாடப்பட்டது.

பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மண்டலச் செயலாளர் ஜானகிராமன், மண்டல துணைச் செயலாளர் குமரன், பாலக்கோடு தொகுதி மாவட்டச் செயலாளர் ராஜகோபால், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாவட்டச் செயலாளர் சென்னகிருஷ்ணன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி செய்தித் தொடர்பாளர் பிருந்தா சிவஞானம், கிள்ளிவளவன், அம்பேத்வளவன், விஜயகுமார் கோடீஸ்வரன்,குணசீலன், JCP செந்தில், சிறுத்தை சபரி, சக்திவேல்,ஆறுமுகபாண்டி, நெல்லை இராமன், வி.பி. முருகன், செல்லதுரை, ஜெய், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் கம்சலா, விடுதலைமதி, இந்துமதி, அமரா சின்னராணி, முனியம்மாள், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த சமத்துவ பொங்கல் விழா, சமூக நீதியும் சமத்துவமும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மகிழ்வூட்டும் நிகழ்வாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *