தஞ்சாவூர், ஜன-13. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு காவல் துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணிக்கு மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் வீரமணி வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் லியோன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

பேரணியில் முன்னாள் ஆளுநர் செங்குட்டுவன், உதவி ஆளுநர் என்ஜினீயர் தமிழ்ச்செல்வன், ரோட்டரி அடையாளம் திட்ட இயக்குனர் ஜாஹிர்உசேன், 2027-ஆம் ஆண்டிற்கான ஆளுநர் (தேர்வு) ஜெயக்குமார், வட்டார ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல், மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தமிழ்செல்வன், ஆலோசகரும் பஸ் அதிபருமான விஜயகுமார், நகர துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், போக்குவரத்து ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேரணி ஆர்.ஆர்.நகர், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வழியாக மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரியை சென்று அடைந்தது. பேரணியில் மன்னர் சரபோஜி கல்லூரி, பாரத் கல்லூரி, பான்செக்கர்ஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *