கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்..
தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்..
இதன் ஒரு பகுதியாக கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டி,சேலை அணிந்த மாணவர்கள் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்..
முன்னதாக பொங்கல் பண்டிகை துவக்க விழாவில் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா,செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர்கள் அனீஷ் குமார்,சாந்தினி அனீஷ் குமார் மற்றும் சுகுணா பாலிடெக்னிக் டீன் ரம்யா,முதல்வர் கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர்..
தமிழர் பாரம்பரிய முறைப்படி முன்னதாக பாலிடெக்னிக் வளாகத்தில் கோலமிட்டு ,தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பொங்கல் வைத்து விழா துவங்கியது இதனை தொடர்ந்து தமிழர் பண்பாட்டுத் திருவிழாவாக நடைபெற்ற விழாவில் வீர விளையாட்டுகளும் இடம் பெற்றது..
குறிப்பாக கண்களை கட்டி கொண்டு உறியடித்தல்,மற்றும் கயிறு இழுத்தல்,கபடி,போன்ற வீர விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் ஆடல்,பாடல்களுடன் நடைபெற்ற பொங்கல் விழா குறித்து சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி கூறுகையில், சுகுணா கல்வி குழுமங்களான கலை அறிவியல்,பொறியியல்,பாலிடெக்னிக்,கலை அறிவியல் என அனைத்து கல்லூரிகளிலும் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடி வருவதாக தெரிவித்தார்..
குறிப்பாக இந்த வருடம் முன்னனி நிறுவனங்களில் சுகுணா பாலிடெக்னிக் மாணவர்கள் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்..