வலங்கைமானில் ஸ்ரீஅங்காளம்மன் ஆலயத்தில் பால்குடம் திருவிழா மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள, அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பால் குடம் திருவிழா மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஆலயத்தில் ஏழாம் ஆண்டு பால்குட திருவிழாவும், குத்து விளக்கு பூஜையும் நடைபெற்றது.
விழாவில் காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து. ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலையில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் எம். எம். சண்முக வேல் மற்றும் நிர்வாக குழுவினர்,விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.