கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் ,தி நமோ ராமா இமைகள் இயக்கம்,
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தலைவர் டி.பாலகிருஷ்ணன் முகாமை துவக்கி வைத்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொது மக்களுக்கு கண்களை பரிசோதித்தனா். நகரப்புற கிராமப்புற பொது மக்கள் சேர்ந்த சேர்ந்த 569 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 302 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.

முகாமுக்கு தி நமோ ராமா இமைகள் இயக்கம் நிதி உதவி அளித்து கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும், சேவையாற்றிய அரிமாக்களுக்கும் லியோ பிள்ளைகளுக்கும் முகாம் நடத்த இடமளித்த சரஸ்வதி பாடசாலை குழுமத்திற்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என லயன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த முகாமை ஏற்பாடுகளை செயலாளர் எஸ் ஆர் முரளி, பொருளாளர் வி செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *