திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநாட்டில் ஆளுநர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டினர் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டில் இருந்து 39 ஆய்வு கட்டுரைகள் உட்பட மொத்தம் 1,003 கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. மாநாடுநடைபெறும் 2 நாட்களிலும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100அடி உயரத்துக்கு முத்தமிழ் முருகன்மாநாடு கொடியேற்றப்படும்.
மாநாட்டுக்கு எத்தனை பேர்வருகின்றனர் என்பதை அறிந்துகொள்வதற்காகத்தான் ரூ.500,ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்க்கடவுள் முருகனின்பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. மாநாடு நடைபெறும் நாளில் முதல்வரின் உத்தரவு பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கநடவடிக்கை எடுக்கப்படும்.
மலையடிவார வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கு கடைகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கைஎடுக்கப்படும். சூழ்நிலையை பொறுத்து மாநாட்டுக்கு முதல்வர் வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.