பொள்ளாச்சி
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது,
விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வால்பாறை அருகே உள்ள சோலையார் இடது கரைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது சரிந்ததால் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி மற்றும் பேத்தி ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்,
இதையடுத்து சம்பவறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இடுப்பாட்டில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதை போல் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் திப்பம்பட்டி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 28 வயது இளைஞர் ஹரிஹரசுதன் உயிரிழந்துள்ளார்.
தொடர்பு கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இருந்தவர்கள் குடும்பத்துக்கு தல 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க ஆணை பிறப்பித்தார்