பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூர் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி 100க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.
ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இரண்டாவது வாரம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா நேற்று 28ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி
அன்றே சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதணை, வழிபாடு, திருவீதி உலா, ஊர்வலம், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் வேண்டுதல் நிறைவேறிய 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மஞ்சள் ஆடை உடுத்தி, பய பக்தியுடன் கடந்த ஒரு வாரமாகவிரதமிருந்து வேப்பூர் பெரிய ஏரியில் சக்தி அழைத்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடங்களை தலையில் சுமந்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.