தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மஞ்சளார் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.
திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி ஜி. கல்லுப்பட்டி ஆகிய கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கணவாய்பட்டி வத்தலகுண்டு குன்னுவாரயன் கோட்டை சிவஞானபுரம் ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காகவும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் அன்பரசன் உதவி பொறியாளர்கள் தளபதி ராம்குமார் கமலக்கண்ணன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்.