திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
நிகழ்வில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சி.சரவணன், பேரூராட்சி மன்றத் தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் தனித்தமிழ் மாறன், சிறப்பு விருந்தினராக வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் ஆண்களுக்கு பேண்ட், சட்டை, துண்டுகள், பெண்களுக்கு புடவை, ஜாக்கெட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பேரூராட்சி மன்ற தூய்மை பணி மேற்பார்வையாளர் அம்பேத்கர் குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.