சென்னை மாநகரின் பசுமை பரப்பை அதி கரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பெரிய ஏரிகளான 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாதவரம். ஏரி 11.78 கோடி செலவிலும், 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணலி ஏரிகள் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளன.

மணலி ஏரியை சென்னை மாநகராட்சி சார்பில் ரூ 10.6கோடி மதிப்பீட்டில் தூர்வாரி, கரையமைத்து, நடைபாதை, பூங்கா, அமரும் இருக்கை போன்ற வசதிகளுடன் சீரமைக்கப்பட்டது ஏரிகளுக்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, நீர்வரத்து கால்வாய்களில் ஷட்டர் கேட்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால், வறண்ட காலங்களில் கூட ஏரிகள் சுத்தமாக இருக்கும். மணலி ஏரியில் இருந்து உபரி நீர் புழல் உபரி கால்வாய்க்கு செல்கிறது.

குறைந்தபட்சம் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் எப்போதும் இருக்கும் கோடைகாலத்திலும் படகு சவாரி நடத்தலாம் என வல்லுநர்கள் தெரிவித்ததை அடுத்து இரண்டு ஏரிகளிலும் அதிநவீன படகுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன குறைந்தபட்சமாக ஒருவருக்கு 100 ரூபாய் உள்ளது 13-க்கும் மேற்பட்ட படகுகள் இங்கு பயன்படுத்தப்பட உள்ளன சென்னைக்கு மிக அருகிலேயே ஒரு படகு குழாம் அமைந்துள்ளது

வடசென்னை பகுதி மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சென்னை பகுதி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதனால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வர வாய்ப்புள்ளது இதனால் இந்த பகுதி பொருளாதார ரீதியாக வலுப்பெறும் என தெரிகிறது இதுகுறித்து மணலி மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் நமது நிருபரிடம் கூறியதாவது மணலி மக்களின் நீண்ட கால கனவு திட்டம் தமிழக முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ளது

இதற்காக மணலி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் இந்த ஏரி ஆழப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் உள்ளது சுற்றுலாத் துறை சார்பில் இங்கு படகுகள் விடப்படுவதால் இந்த பகுதி வளர்ச்சி பெறும் இன்று முதல் பொதுமக்கள் படகுகள் பயணம் செய்யலாம் எனக் கூறினார்

மணலி ஏரி படகு குழாமினைப் அமைச்சர் கே என் நேரு பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்து, படகு சவாரி மேற்கொண்டார். இந்திகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா டாக்டர் கலாநிதி வீரசாமி எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ் சுதர்சனம், கேபி சங்கர் துணை மேயர் .மு.மகேஷ்குமார், மண்டல குழு தலைவர்கள் ஏவி ஆறுமுகம் என். நந்தகோபால் ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய்,சுற்றுலா இயக்குநர் தா.கிதிஸ்ராஜ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *