கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் வெண்ணமலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மாணவிகள் சுவாதி ,ஸ்வேதா, வேலண்டீனா, வர்ஷினி, வெண்ணிலா, விகாசினி, யாழினி தீபா, யாழினி ஆகியோர் தங்கள் இறுதி ஆண்டு பாடத்திட் டத்திற்காக கிராமப்புற வேளாண்மை அனுபவ திட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பங்களித்த மாணவிகள் இதற்காக அடுத்த 60 நாட்களுக்கு கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமத்தில் தங்கி, கரூர் ஒன்றிய வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம், பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
இது தவிர விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் விவசாய பயிர்கள் குறித்து கள ஆய்வு, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு சேவையாற்றுதல், தமிழ்நாடு அரசு வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தல், தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என பல்வேறு அனுபவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.வேளாண்மை இணை இயக்குனர் காதர் முகைதீன் விவசாய கல்லூரி மாணவிகளுக்கு விவசாய தொழில் நுட்பம் குறித்து விளக்கமளித்தார்