காட்டுமன்னார்கோயில்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டாராங் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் மற்றும நினைவேந்தல் நிகழ்ச்சியும் மற்றும் சிபிஐ பிரிவுக்கு வழக்கு மாற்றக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் (தனி) தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் குமராட்சி பாலு தலைமை தாங்கினார்
பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் மிலிட்டரி ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்
பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் காட்டுமன்னார்கோவில் தெற்கு மாவட்ட செயலாளர் திருஞானம் முருகேசன் தமிழரசன் பழனிச்சாமி சாட்டை மேடு சதாசிவம் காட்டுமன்னார்கோவில் பழனி சாமி மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கண்டன உரை ஆற்றுவதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமாறன் மற்றும் ஏழைகள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் எம் ஏ டி அர்ஜுனன் மற்றும் இந்திய தலைமுறை கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் அம்பேத்கர் மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் தங்க முருகன் பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் அருள்செல்வன் கடலூர் மாவட்ட துணை தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்
அப்பொழுது அவர்கள் பேசியதாவது உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்
வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையில் வலியுறுத்தி கண்டன உறை ஆற்றினார்கள்
முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
மேலும் இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் மக்கள் விடுதலை கட்சியின் இளைஞரணி செயலாளர் வானமாதேவி பிரபு காட்டுமன்னார்கோயில் குமராட்சி சிதம்பரம் விருத்தாச்சலம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளர்கள் திருஞானம் ரவி கக்கன் ஜி செல்வமணி செல்வம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்