தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தினர் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கினர்
திருப்பூர் தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞரணி சார்பில் தாராபுரத்தில் போக்குவரத்து காவல் துறையுடன் சேர்ந்து தாராபுரம் வழியாக பழனிக்கு தைப்பூசம் பாதயாத்திரை செல்லும் சுமார் ஒரு 1000’திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பாக செல்ல ஒளிரும்பட்டை வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சி மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் குகன் தலைமையில் நடைபெற்றது உடன் தாராபுரம் வட்டார போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சாஜினி மற்றும் சூர்யா நற்பணி இயக்க உறுப்பினர்கள் மணிகண்டன், பிரவீன்,பிரணீஷ், சரவணன், அஜய், கபிலன், தன்வின், ஆனந்த், புகழ் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்