கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி சமத்துவபுரத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. தலைமையில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி முன்னிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா 2026 நடைபெற்றது.
தமிழகத்தின் பாரம்பரிய பெருவிழாவாகத்திகழும் தைத்திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள்அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்குடன் பொங்கல் விழாநடத்தப்படுகிறது.
பொங்கல்பண்டிகையின் உண்மையான பண்பாட்டுச்சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம்படுத்துவதோடு பொங்கல் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடிடும் வகையில் சமத்துவ பொங்கல் விழா சாதி, மதம், இனம், மொழி, பொருளாதார வேறுபாடின்றி,சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும் வகையில் பொங்கல் விழாவினை கொண்டாடினார்கள். சமத்துவபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து நடைபெற்ற பாராம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, கயிறு இழுத்தல்,இசை நாற்காலி மற்றும் பல விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீ.ரெ.வீரபத்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) கரூர் கிழக்கு ச.ஞானசேகரன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சு.தனசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.