செங்குன்றம் செய்தியாளர்
திருச்சி மாவட்டம் திருவெம்பூரை சேர்ந்தவர் பலேகே ரத்தினகுமார் (வயது 42) இவருக்கு ராணி என்ற மனைவியும் கிருத்திக்சபிஸ்கர் (வயது 10) என்ற மகனும் இருக்கின்றனர்.இவர் சென்னை அடுத்த விநாயகபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சபிஸ்கர் நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்தபடியால் , மருத்துவரின் ஆலோசனைப்படி அவரை நீச்சல் கற்றுக் கொடுக்க கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள ப்ளூசீல்
உரிமையாளர் காட்வின் என்பவரை அணுகி தனது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அங்குள்ள பயிற்சியாளர் அபிலாஷ் என்பவரை நியமித்து கடந்த இரண்டு நாட்களாக நீச்சல் பயிற்சி அளித்து கற்றுக் கொடுத்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் வழக்கம் போல் சிறுவனின் தந்தையும் தாயும் சிறுவனை காரில் அழைத்துக் கொண்டு ப்ளூசில் நீச்சல் பயிற்சி மையத்திற்கு சென்று அங்குள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் நீச்சல் பயிற்சி அளித்து வந்ததாக தெரிய வருகிறது.
இதற்கிடையே சிறுவனின் தந்தை நீச்சல் பயிற்சி மையத்தின் அருகில் அலுவலக நிமித்தமாக காரில் அமர்ந்து கொண்டு அலுவல் பணிகளை தனது லேப்டாப்பில் வேலைசெய்து வந்துள்ளார். தாய் ராணி சிறுவனின் அருகில் இருந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் தனது பிள்ளையை அருகில் இருந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
திடீரென ஒரு கட்டத்தில் சிறுவன் நீரில் தத்தளித்துக் கொண்டு மூழ்கியபடி இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்து பயிற்சியாளரிடம் மகன் நீரில் மூழ்கிகிறான் என்று சொன்னதில்அதற்கு அந்த நீச்சல் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் அப்படி இருந்தால் தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும் என்றும் நீங்கள் சற்று அமைதியாக இருங்கள் அவர் தானாக நீச்சல் பழகி மேலே வருவார் எனக் கூறியதாக கூறப்படுகிறது .
ஆனால் சிறிது நேரத்தில் சிறுவன் தண்ணீரில் மூழ்கி மூர்ச்சையாகி மிதந்து வந்ததால் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாயார் ராணி அலறி அடித்தபடி ஓடி வந்து காரில் இருந்த தனது கணவரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார்.
உடனே மூர்ச்சையாகி மிதந்த தனது மகனை காப்பாற்ற சிறுவனின் தந்தையும் தாயும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கு அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர் .
இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள்
நடந்த விவரம் குறித்து அங்கிருந்த நீச்சல் பயிற்சி மையத்தின் மேலாளர் மற்றும் பயிற்சியாளரிடம் நீச்சல் கற்றுத் தருவதாக கூறி எனது மகனை சாகடித்து விட்டீர்களே?
எனக் கூறி கதறி அழுததனர்.
இது பற்றிய தகவல் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் காவல்துறையினர் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரிவு 105ன் கீழ் அதாவது கொலை குற்றம் நிகழ்த்துதல் சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மருத்துவரின் ஆலோசனைப்படி நீச்சல் கற்றுக் கொள்ள வந்து உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.