திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் சரக பகுதியில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் அறிவழகன் மற்றும் முதல் நிலை காவலர் கல்யாணசுந்தரம், இரண்டாம் நிலை காவலர் சுபன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வலங்கைமான் அருகே உள்ள உத்தானி பகுதியில் குடமுருட்டி ஆற்றில் அனுமதியின்றி மணல் திருடுவதற்கு பயன்படுத்திய 4 இரு சக்கர வாகனங்களை வலங்கைமான் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உத்தானி பகுதியை சேர்ந்த ராகவன் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் ஆலங்குடி பகுதியில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றிய 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *