தமிழக அரசின் மருத்துவத்துறை , வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட 18 துறைகளில் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று அதற்கு 40 நாட்களில் தீர்வு காணும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது மக்களுடன் முதல்வர் திட்டம்
இந்த திட்டத்தை கிராம ஊரக பகுதியிலும் விரிவடைய செய்யும் நோக்கத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் ஊராட்சியில் துவங்கிய இந்த முகாம் பால்நல்லூர், காட்ரம்பாக்கம், எறையூர், கொளத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பாக நடைபெற்றது இதில் 3000க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்
இந்நிலையில் கீரநல்லூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில் கீரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன் முன்னிலையில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் செல்வழிமங்கலம், பொடவூர், சேந்தமங்கலம், ராமானுஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பயன்பெற்றனர்.
இந்த முகாம் துவக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜீவா ரவி, சார்லஸ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சோகண்டி பாலா, திமுக மாவட்ட அமைப்பாளர் பொடவூர் ரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.