மேட்டுப்பாளையத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி. ஆர். சண்முகசுந்தரம் வழங்கினார் . 33 வார்டுகளை கொண்ட மேட்டுப்பாளையம் நகராட்சியில் கிறிஸ்டியன் காலனி, பத்மாலயா கார்டன், மணிநகர், சந்தை கடை உள்ளிட்ட நான்கு இடங்களில் ஒரே நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் புத்தாடைகள், சில்வர் தட்டுகள் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.டி.ஆர். சண்முகசுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் தங்களது ஆதரவு எப்பொழுதும் திமுகவிற்கு தான் என்று பகிரங்கமாக கூறினர், மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி அமையும் வகையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓடந்துறை , சிறுமுகை, முடுதுறை சின்னக்கள்ளிப்பட்டி அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெறும் என்று திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக
சுந்தரம் கூறினார். நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வக்கீல் அசரப்பலி, வக்கீல் முனுசாமி மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம். ஏ.ஆர். கே. ஹக்கீம் மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு, மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் , வார்டு செயலாளர்கள் BL2,BL C, கழக நிர்வாகிகள், முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர். கோடிகணக்கானரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட இந்த நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண் ஒருவர் தலைமை செயற்குழு உறுப்பினர் டி. ஆர். சண்முகசுந்தரம் அவர்களுக்கு இந்து முறைப்படி ஆரத்தி எடுத்து வரவேற்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.