காரமடை எஸ்விஜி வி பள்ளியில்ஆண்டு விழா
காரமடை எஸ்விஜி வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் லோகு முருகன் தலைமை தாங்கினார்
தாளாளர் டாக்டர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார் முதல்வர் சசிகலா வரவேற்று பேசினார். விழாவில் மாற்றம் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி தேர்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர் தாரகேஸ்வரி நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.