தேவாரம் அருகே பண்ணைப் புரம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பண்ணைப் புரம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது இந்த விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி இளங்கோ தலைமை தாங்கினார் பேரூராட்சி செயல் அலுவலர் சா. இளங்கோவன் பொறுப்பு முன்னிலை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்

விழாவையொட்டி பேரூராட்சி வளாகத்தில் வண்ணக் கோலங்கள் இட்டு புது பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்ன கோஷமிட்டு மகிழ்ந்தனர்.

பேரூராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் நமது தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்தும் பெண்கள் சேலை தாவணிகள் அணிந்து விழாவை சிறப்பித்தனர்

நிகழ்ச்சியில் பண்ணைப் புரம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் அலுவலக உதவியாளர் ஆகியோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *