சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 1 வது மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா மிக சந்தோஷம் பொங்கும் பொங்கல் கொண்டாட்டத்தில் மண்டல உதவி அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது
செயற்பொறியாளர்கள் பாபு பாண்டியன் உதவி வருவாய் அலுவலர் அர்ஜுன் ஆகியோர் முன்னிலை நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் அனைவரும் பாரம்பரிய ஆண்கள் வேட்டி சட்டை அணிந்தும் பெண்கள் சேலை அணிந்து பாரம்பரிய கிராமத்தில் நடைபெறும் பொங்கல் விழா போல அதிகாரிகள் ஊழியர்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது
இந்த வழாவில் உரியடி.கோலப்போட்டி மற்றும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மண்டல அலுவலக வளாகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கருப்பு பொங்கல் பானை வைத்து பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி சூரியனை வழிபட்டனர்
இந்த பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.