கம்பம் நகரில் எம்ஜிஆர் 109 ஆவது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளையொட்டி
அண்ணா திமுக அமைப்பு செயலாளர் தேனி மேற்கு மாவட்ட செயலாளர்
முன்னாள் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே ஜக்கையன் தலைமையில் கம்பம் வடக்கு நகரச் செயலாளர் எம்.ஆர்.கார்த்திகேயன் முன்னிலையில், கம்பம் காந்தி சிலை அருகே அமைக்கப் பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த விழாவில் கம்பம் முன்னாள் நகரத் தந்தை டி.டி. சிவகுமார் உள்பட நகர அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்