ஆண்டிபட்டி தேனி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடும் சரிவு விவசாயிகள் வேதனை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி கம்பம் சின்னமனூர் ஆகிய மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடும் சரிவடைந்துள்ளதால் இதனை விளைவித்த விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பகுதிகளான பிச்சம்பட்டி கன்னியப்பிள்ளை பட்டி ஏத்த கோவில் தேனி சுற்றியுள்ள கண்டமனூர் அமச்சியாபுரம் தாடி சேரி தப்பு குண்டு காட்டுநாயக்கன்பட்டி சின்னமனூர் நகரை சுற்றியுள்ள காமாட்சிபுரம் வெள்ளையம்மாள்புரம் மூர்த்தி நாயக்கன் பட்டி கம்பம் நகரை சுற்றியுள்ள ராயப்பன்பட்டி கோகிலாபுரம் எரசக்கநாயக்கனூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ தக்காளிப்பட்டி ரூபாய் 1300 விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
இதனால் சில்லறை விலையில் கிலோ 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இதனை விளைவித்த விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர் இது குறித்து கோகிலாபுரம் விவசாயி கோவிந்தசாமி கூறும் போது 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்படுவதால் தக்காளி விளைவிக்கப்பட்ட செலவினங்கள் எடுப்பு கூலி வண்டி கூலி வேலை ஆட்கள் கூலி போன்றவை அதிகமானதால் செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் நஷ்டத்தில் தக்காளியை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம்.
இதனால் நாங்கள் உழைத்த கூலி இல்லாமலும் வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கடும் வேதனையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்