கம்பம் நகரில் பிரசித்தி பெற்ற வேலப்பர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கல்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரில் இதய பகுதியில் அமைந்துள்ள நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு வேலப்பர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 22 8 2024 அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது தமிழ் கடவுள் ஆன இந்த முருகன் கோயிலுக்கு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் உள்ளனர்
இந்த சிறப்புமிக்க கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 19 20 21 ஆகிய தேதிகளில் கும்பாபிஷேக யாக கால பூஜைகள் நடைபெற்று 22.8.2024. வியாழக்கிழமை பல்வேறு ஸ்தளங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது
இதற்கான அழைப்பிதழை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா .ராமகிருஷ்ணன் அதனை கோவில் அறங்காவலர்கள் பெற்றுக்கொண்டனர் மேலும் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் மற்றும் முருக பக்த கோடிகள் ஆன்மீக பக்தர்கள் உள்பட அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.