மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது
தமிழ்நாடு அரசு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் இணைந்து மாநில அளவில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை உயர்நிலை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதன் பொருட்டு ஆகஸ்ட் 12ந் தேதி மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த், முதல்வர் முனைவர் பரஞ்சோதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஸ் குமார் ராஜா, பெருமாள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் அலுவலர் திருவாசகம் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.